×

ரேஷன் கடைகளுக்கான மானியமாக ₹273 கோடி ஒதுக்கீடு கூட்டுறவு அதிகாரிகள் தகவல் தமிழகத்தில் 2023-2024ம் ஆண்டிற்கு

வேலூர், மார்ச் 15: தமிழகத்தில் 2023-2024ம் ஆண்டிற்கான ரேஷன் கடைகளுக்கான மானியமாக ₹273 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூட்டுறவு அதிகாரிகள் தெரிவித்தனர். கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் பல்வேறு கூட்டுறவு சங்கங்கள் ரேஷன் கடைகளை நடத்துகின்றன. அவற்றில் பொது வினியோக திட்டத்தின் கீழ் கார்டுதாரர்களுக்கு அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவு தானியங்கள் வழங்கப்படுகின்றன. ரேஷன் கடைகள் வாடகை, ஊழியர்கள் சம்பளம், மின் கட்டணம், போக்குவரத்து போன்றவற்றிற்காக ஏற்படும் செல்வினங்களுக்காக கூட்டுறவு சங்கங்களுக்கு தமிழக அரசு ஆண்டுதோறும் மானியம் வழங்குகிறது. அதன்படி, 2023-2024ம் ஆண்டிற்கான மானிய தொகையாக ₹273.92 கோடியை விடுவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த மானிய தொகை மாநில தலைமை கூட்டுறவு வங்கி வாயிலாக, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் செலுத்தப்பட்டு, கூட்டுறவு சங்கங்களுக்கு பட்டுவாடா செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மானியம் தொகையை அரசு விடுவித்துள்ளதால் கூட்டுறவு சங்க பணியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக கூட்டுறவு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post ரேஷன் கடைகளுக்கான மானியமாக ₹273 கோடி ஒதுக்கீடு கூட்டுறவு அதிகாரிகள் தகவல் தமிழகத்தில் 2023-2024ம் ஆண்டிற்கு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Vellore ,Dinakaran ,
× RELATED தேர்தல் அலுவலர்களிடம் தகராறில்...